திருமானூர் ஒன்றிய குழு கூட்டம்
திருமானூர் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜாகீர்உசேன், பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செலவினங்கள் குறித்து வாசிக்கப்பட்டது. கள்ளூர் கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டி கவுன்சிலர் மதியழகன் ஒன்றிய கூட்டங்களில் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தார். இதையடுத்து, கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் கள்ளூர் கிராமத்திற்கு ஏற்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் நிறைவேற்ற ேவண்டிய பணிகள் குறித்து பேசினர். இதனைதொடர்ந்து ஆன்லைன் டெண்டர் அவகாச தேதியை 10-ந் தேதி வரை நீட்டிக்கக்கோரி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பதில் கூறினர். மேலும் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். முடிவில் வட்டார மேலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.