ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - ஐகோர்ட்டின் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய திருமாவளவனின் மனு தள்ளுபடி
ஐகோர்ட்டின் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை,
தமிழகத்தில் அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு அனுமதி அளிக்கும்படி, பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஐகோர்ட் கடந்த செப்டம்பர் 22-ந்தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொ.திருமாவளவன் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் மதநல்லிணக்கம் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை சம்பந்தப்பட்டுள்ளதால், மறுஆய்வு கோர உரிமை உள்ளதாக தெரிவித்திருந்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், ஐகோர்ட்டின் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.