கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருமொழி விழா
கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருமொழி விழா தொடங்கியது.
திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நேற்று திருமொழி விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து வருகிற 15-ந்தேதி வரை மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி பிரபந்தம் சேவித்தல், இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பொது ஜன சேவை நடக்கிறது. 15-ந்தேதி முத்துக்குறி அரையர் தீர்த்தம், ஸ்ரீசடகோபம் சாதித்தல் நடைபெறுகிறது. வருகிற 15-ந் தேதி வரை தாயார் புறப்பாடு இல்லை. மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சேவை கிடையாது.
Related Tags :
Next Story