திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ெரயிலை திருவாரூருக்கு இயக்க வேண்டும்
பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன்கருதி திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரெயிலை திருவாரூருக்கு இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருத்துறைப்பூண்டி:
பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன்கருதி திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரெயிலை திருவாரூருக்கு இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோரிக்கை மனு
திருத்துறைப்பூண்டி திருச்சி ெரயில்வே கோட்ட பொது மேலாளருக்கு திருவாரூர் மாவட்ட ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரூ.295 கோடி செலவில் அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டது. தற்போது இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தடத்தில் தினமும் காலை மற்றும் மாலைகளில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
நிறுத்தி வைக்கப்படும் ரெயில்
கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. வேதாரண்யம் மற்றும் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருவாரூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அதிக அளவில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உயர் சிகிச்சை பெறுபவர்கள் திருவாரூர், நாகை, தஞ்சை போன்ற தலைநகரங்களில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அகஸ்தியம்பள்ளியில் இருந்து காலை 8.35 மணிக்கு திருத்துறைப்பூண்டிக்கு வரும் ரெயில், மதியம் 3.30 மணி வரை அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. இதேபோல் அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு மாலை 5.45 மணிக்கு வரும் ெரயில் மறுநாள் காலை 6.30 மணி வரை அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகிறது.
திருவாரூருக்கு இயக்க வேண்டும்
இவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் நேரத்தில் திருவாரூருக்கு இந்த ெரயிலை இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கினால் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம மக்கள், மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் ெரயில்வே துறைக்கும் அதிக வருமானம் கிடைக்கும். அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி ரெயிலை திருவாரூருக்கு இயக்க வேண்டும் என பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே தென் மண்டல கோட்ட ெரயில்வேநிர்வாகம் உடனடியாக செயல்பட்டு அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி ரெயிலை திருவாரூருக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.