முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்


முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
x

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் அம்மியில் வைத்து மஞ்சள் அரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் அம்மியில் வைத்து மஞ்சள் அரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மஞ்சள் அரைப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதங்களில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளில் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு பல்வேறு உபயதாரர்கள் சார்பில் இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அதன்படி கடந்த 19-ந்தேதி ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நகரத்தார்கள் சார்பில் பால்குடம் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் வெள்ளிக்கிழமை அன்று அம்மியில் மஞ்சள் அரைத்து அம்பாளுக்கு மஞ்சள் அபிஷேகமும், 2-வது செவ்வாய்கிழமையான வருகிற 26-ந்தேதி பிரமாணர்கள் சார்பில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், 2-வது வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை வழிபாடு நிகழ்ச்சியும், ஆடி பூரம் தினத்தன்று வளையல் அலங்காரம் நிகழ்ச்சி நடக்கிறது.

3-வது வெள்ளிக்கிழமை அன்று கணபதி ஹோமம் மற்றும் 1008 சங்காபிஷேகமும், 4-வது வெள்ளிக்கிழமை அன்று காலை கோமாதா பூஜை மற்றும் மாலை திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடக்கிறது.

மஞ்சள் அபிஷேகம்

இன்று ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் சுமார் 300 கிலோ மஞ்சள் கொண்டு பெண்கள் அம்மியில் வைத்து மஞ்சள் அரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் 51 அம்மிகள் வரிசையாக வைக்கப்பட்டு அங்கு பெண்கள் ஒன்றன்பின் ஒன்றாக அம்மியில் பச்சை மஞ்சள் அரைத்தனர். இந்த மஞ்சளை கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது.

நிகழ்ச்சியின்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் சரவணன், நகர்மன்ற கவுன்சிலர்கள் பசும்பொன் மனோகரன், சோ.கண்ணன், கலாகாசிநாதன், தெய்வானை இறமாறன், ஹேமலதாசெந்தில், கோவில் கணக்கர் பாண்டி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story