முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி முனியசாமி கோவில் கொடை விழாவை யொட்டி நேற்று காலையில் கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடந்தது. இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும். மேலும் கொரோனா நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பஜனையுடன் 201 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களில் 5 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மகளிர் அணியினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story