முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
தூத்துக்குடி
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இத்திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் மூலஸ்தான தீபாரதனை நடைபெற்றது. இதில் குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story