முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

ஆவுடையார்கோவில் அருகே முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை மதுரை ஆதீனம் ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரியார் தொடங்கி வைத்தார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பூஜையில் ஈடுபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு மதுரை ஆதீனம் ஆசி வழங்கினார். இறுதியில் அம்மனுக்கு படைக்கப்பட்ட கஞ்சி வழங்கப்பட்டது.


Next Story