ஒத்தவீடு மகாமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
மேலநத்தம ஒத்தவீடு மகாமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
திருவாரூர்
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை அருகே உள்ள மேலநத்தம் ஒத்தவீடு மகாமாரியம்மன் கோவிலில் 9-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக மகா மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக அர்ச்சனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அய்யப்ப, முருக பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story