வேப்பிலை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


வேப்பிலை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

வேப்பிலை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

திருச்சி

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல்நாளையொட்டி உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு நேற்று திரு விளக்குபூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். உலக நன்மைக்காகவும், நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழவும், விவசாயம் செழித்திட, பருவ மழை தவறாது பெய்திட வேண்டியும் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜை காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ. எஸ். வீரமணி, கோவில் செயல் அலுவலர் வைரமணி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story