பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை
தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
தர்மபுரி கடைவீதி ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய ஸ்ரீ மருதவனேஸ்வரர் கோவில் 46-ம் ஆண்டு மாரியம்மன் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் திருவீதிஉலா நடந்தது. தொடர்ந்து விருந்தாடி அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பளித்தார். இந்த குத்து விளக்கு பூஜையை தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, தர்மபுரி நகர மன்ற துணைத்தலைவர் நித்யா, நகர்மன்ற உறுப்பினர் உமையாம்பிகை ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் சிறப்பு பூஜைகளுடன் அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் வளையல், தாலி கயிறு மங்கல பொருட்கள் மற்றும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சுகுமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.