திருவோத்தூர் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
திருவோத்தூர் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்யாறு
திருவோத்தூர் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவோத்தூர் பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி கோவிலில்புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகத்துக்காக பந்தல்கால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டமாக பூஜைகள் நடத்தப்பட்டு 3-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தேறியது.
நேற்று அதிகாலை 2 மணி முதல் 6-ம் கால யாக பூஜையும் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு பூஜையுடன் கலசங்கள் புறப்பட்டு ராஜகோபுரம் உள்பட மூலவர் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் சிவாச்சாரியார் 6.30மணி அளவில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஒ.ஜோதி எம்.எல்.ஏ.ஆகியோருக்கு சிவாச்சாரியர்கள் சிறப்பு அர்ச்சனை செய்தனர்.
கோவிலுக்குள் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதே நேரத்தில் கோவிலை சுற்றிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.