"இதுவும் ஒரு வீரமரணம்தான்" - காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ராகுல்காந்தி ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.சந்தோக் சிங் சவுத்ரி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி இன்று லுதியானாவில் ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார். அவர் நடந்து சென்றபோது மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்சில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெர்வித்து விட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது மறைந்த ஜலந்தர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரிக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவும் ஒரு வீரமரணம்தான். நீங்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.