இதுதான் புதிய இந்தியா: பிஎப்ஐ அமைப்பு தடை விதிப்புக்கு யோகி ஆதித்யநாத் வரவேற்பு


இதுதான் புதிய இந்தியா: பிஎப்ஐ அமைப்பு தடை விதிப்புக்கு யோகி ஆதித்யநாத் வரவேற்பு
x

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிப்புக்கு உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்பு தெரிவித்துள்ளார் .

சென்னை,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகனை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிப்புக்கு உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்பு தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

தேசவிரோத செயல்களில் ஈடுபடும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை பாராட்டுக்குரியது மற்றும் வரவேற்கத்தக்கது.

தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகள், குற்றவாளிகள் மற்றும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.இது தான் புதிய இந்தியா.என தெரிவித்துள்ளார்.


Next Story