சென்னையில் இந்த முறை வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது - அமைச்சர் கே.என்.நேரு


சென்னையில் இந்த முறை வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது - அமைச்சர் கே.என்.நேரு
x

சென்னையில் இந்த முறை வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில், வெள்ளத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

திருச்சி மாநகராட்சியில் உள்ள சாலைகளை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. திருப்புகழ் கமிட்டி பரிந்துரை செய்த படி ரூ. 935 கோடியில் எல்லா இடங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதனை வெளியேற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையை வெள்ளம் பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பணிகளை வேகப்படுத்துமாறு ஒப்பந்ததாரர்களை வலியுறுத்தியுள்ளோம். இப்போது பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த முறை நிறைய வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இதனை முன்னின்று கவனித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story