தோகைமலை ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்
தோகைமலை ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடந்தது.
கரூர்
தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் ேநற்று ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் லதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாப்பாத்தி, ஒன்றிய ஆணையர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அலுவலர் பழனி கணேசன் 20 தீர்மானங்களை வாசித்தார். அப்போது 18 தீர்மானங்களுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவும், 2 தீர்மானங்களுக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். தோகைமலை ஒன்றியத்தில் மழையில்லாததால், தற்போது கொசு மருந்து அடிக்கும் எந்திரங்கள் தேவை இல்லை, மேலும் ஒப்பந்தக்காரர் அதற்கு உரிமை கோரி இருந்தார். அந்த 2 தீர்மானத்தையும் ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதில், ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story