தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம்


தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில்  அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டூவிபுரத்தில் நடந்தது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், தலைமை கழக பேச்சாளர்கள் தீப்பொறி முருகேசன், வைகைப்பாண்டி, நாஞ்சில் ஞானதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் 250 பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வக்கீல் வீரபாகு, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story