தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் சிங்கி இறால் கொழுக்க வைத்தல் பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் சிங்கி இறால் கொழுக்க வைத்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்க வருகிற 28-ந் தேதி கடைசி நாளாகும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் சிங்கி இறால் கொழுக்க வைத்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்க வருகிற 28-ந் தேதி கடைசி நாளாகும்.
இது குறித்து மீன்வளக்கல்லூரி முதல்வர் சாந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிங்கி இறால்
தூத்துக்குடி மீன் வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறை சார்பில் 'சிங்கி இறால் கொழுக்க வைத்தல்" குறித்த பயிற்சி வருகிற 29.6.2022-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த பயிற்சியில் வளர்ப்புக்கு ஏற்ற சிங்கி இறால் வகைகள், சிங்கி இறால்களில் ஆண், பெண் அடையாளம் கண்டறிதல், சிங்கி இறாலின் இனவிருத்தி, சிங்கி இறாலின் வளர்ச்சி, கொழுக்க வைக்க சிங்கி இறால் தேர்வு செய்யும் முறை, கிடைக்கும் காலங்கள், இடங்கள், சிங்கி இறால் வளர்ப்பு முறைகள், அறுவடை முறைகள், சிங்கி இறால் வளர்ப்பு செலவின வருமான கணக்கீடு குறித்த தொழில்நுட்ப வகுப்பு மற்றும் செயல்விளக்க பயிற்சிகள் அளிக்கப்படும்.
28-ந் தேதி கடைசிநாள்
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மொத்தம் 50 பங்கேற்பாளர்கள் விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களின் இடங்களிலிருந்து தூரத்தின் அடிப்படையில் பங்கேற்பாளர்களுக்கு நிதியின் இருப்புக்கு உட்பட்டு குறைந்தபட்ச பயணப்படி வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 28.6.2022 மாலை 5 மணிக்குள் பேராசிரியர் மற்றும் தலைவர், மீன்வளர்ப்பு துறை, மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி, செல்போன் - 09442288850 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.