தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா கொடியேற்றம்


தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா கொடியேற்றம்
x

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 40-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கொடிபவனி, ஜெபமாலை நடந்தது. நேற்று முன்தினம் வாணவேடிக்கையுடன் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை ஜெபமாலை பிரார்த்தனை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ந் தேதி லூர்தம்மாள் புரம் லூர்து அன்னை ஆலய பங்குதந்தை அன்றனி புருனோ தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை தங்கத்தேர் கெபி கமிட்டி, புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், புனித பூண்டிமாதா அன்பிய மக்கள் செய்து இருந்தனர்.


Next Story