தூத்துக்குடி நகர், உட்கோட்ட பகுதியில் சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் இடங்கள்
தூத்துக்குடி நகர், உட்கோட்ட பகுதியில் சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி நகர் மற்றும் ஊரக கோட்ட பகுதி உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், இன்று(சனிக்கிழமை) மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தூத்துக்குடி ஊரக உட்கோட்ட மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் பத்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாதாந்திர பராமரிப்பு பணி
தூத்துக்குடி ஊரக கோட்ட பகுதியில் உள்ள உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இன்று(சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இதன்படி மஞ்சள்நீா்காயல் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான ஏரல், சிறுதொண்டநல்லூர். வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை. மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்காணி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி. வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, தோழப்பன்பண்ணை ஆழ்வார்திருநகரி சிவந்திபட்டி ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
ஸ்ரீமூலக்கரை உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், மூலக்கரை. அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம். செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம். சிவகளை. பெருங்குளம், பண்ணைவிளை. பண்டாரவிளை ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
செய்துங்கநல்லூர்
செய்துங்கநல்லூர் உபமின் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அனவரதநல்லூர், ஆழிகுடி. முத்தாலங்குறிச்சி, அய்யனார்குளம்பட்டி ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
நாகலாபுரம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான நாகலாபுரம், கவுடண் பட்டி, புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், டாப்பாத்திமுகாம், குருவார்பட்டி கோடாங்கி பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் (விநியோகம்-நகர்) அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நகர்பகுதி
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பக்கிள் ஓடை அருகில் இடையூறாக உள்ள மின்மாற்றியை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணி முதல் 5 மணி வரை ராஜீவ் நகர், மில்லாபுரம், அண்ணாநகர் 2 வது, 3வது தெரு, ராஜகோபால் நகர், டி.எம்.பி. காலனி 4 வது, 5வது தெரு, பர்மா காலனி, பால்க பாண்டி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.