தேசிய நீச்சல்போட்டிக்கு தூத்துக்குடி வீரர்கள் தேர்வு
தேசிய நீச்சல்போட்டிக்கு தூத்துக்குடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி
மாநில அளவில் ஐ.சி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டிகள் பொள்ளாச்சியில் நடந்தது. இந்த போட்டிகளில் தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் ஜோனத்தன், முகமது முஜிபுர் ரகுமான், கார்மேல் எப்ரிம், ஜோசுவா பெர்னாண்டோ, டேனில் பெர்னாண்டோ, ராச இனியா ஆகியோர் தனிநபர் பிரிவில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 28, 29, 30-ந் தேதிகளில் பெங்களூரில் நடைபெறு உள்ள தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்க தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியாளர்கள் தர்ஷினி சுரேஷ்பாபு, ஆதிலிங்கம், மாரிக்கண்ணன் ஆகியோரை பொதுமக்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story