தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி துறைமுக கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் துறைமுக மேல்நிலைப் பள்ளியில் 1997ம் ஆண்டு மேல்நிலைக் கல்வி பயின்ற மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த நிகழ்ச்சி வ.உ.சி துறைமுக சமுதாயக் கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பலர் குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை ஆசிரியர்கள் யூஜின் சகாயராஜ், ஹெக்டோ ஆகியோர் தலைமை தாங்கினர். துறைமுக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியயை சர்மிளா முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் உலகபிரகாஸ், சுப்புலட்சுமி ஆகியோர் வரவேற்று பேசினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story