தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: காவல் அதிகாரி உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட்...!


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: காவல் அதிகாரி உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட்...!
x

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலம் சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சட்டசபையில் விவாதம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை கடந்த 18ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அடங்கிய பரிந்துரைகள் மீதும், அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் திருமலை சஸ்பெண்ட செய்யப்பட்டுளளார். திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையாளராக பணி செய்து வருகிறார். காவல் அதிகாரி திருமலை தவிர மேலும் 3 போலீஸ்காரர்கள் சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


Next Story