தூத்துக்குடி மாணவர் வெற்றி


தூத்துக்குடி மாணவர் வெற்றி
x

சர்வதேச கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாணவர் வெற்றி

தூத்துக்குடி

தூத்துக்குடி:

மலேசியாவில் நடந்த சர்வதேச ஜூனியர் கராத்தே போட்டியில் தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் தாலுகா மேலமீனாட்சிபுரத்தை சேர்ந்த ராஜ் மகன் மகேஷ் (வயது 11) என்ற மாணவர் கலந்து கொண்டு விளையாடினார். இதில் மகேஷ் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கத்தை வென்று உள்ளார்.

தங்கபதக்கம் பெற்று தாயகம் திரும்பிய கரத்தே விளையாட்டு வீரர் மகேஷ், பயிற்சியாளர்கள் முருகேசன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் லிங்கராஜ் தலைமை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் கனிராஜ் மள்ளர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி மாவ்டட முன்னாள் தலைவி லீலாவதி, ஓட்டப்பிடாரம் தெற்கு மண்டல துணை தலைவர் ராம்குமார், விவசாய அணி துணை தலைவர் கதிரவன், உமரி செல்வா, கவர்னகிரி சக்தி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story