தூத்துக்குடி சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் புத்தக வெளியீட்டுவிழா
தூத்துக்குடி சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் புத்தக வெளியீட்டுவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி சுரேஷ் அகாடமியில் சுதந்திர தினவிழா மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான மாத இதழ் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. போட்டித் தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளை உள்ளடக்கி உள்ள இந்த புத்தகத்தை சுரேஷ் அகாடமியின் நிறுவனர் து.சுகேஷ் சாமுவேல் வெளியிட்டு பேசினார். அப்போது, போட்டித் தேர்வுகளில் அதிக அளவு நடப்பு நிகழ்வுகளின் தாக்கம் உள்ளதாகவும், அதனை எதிர்கொள்ள இந்த புத்தகம் உதவியாக இருக்கும், நடப்பு நிகழ்வுகள், அதன் பின்புலத்துடன் விவரிக்கப்பட்டு இருப்பது சிறப்பம்சம் ஆகும். இந்த புத்தகம் ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் வெளியிடப்படும், என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், முன்னாள் வெற்றியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
----
Related Tags :
Next Story