அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட வேண்டும்; தோப்பு வெங்கடாசலம் கோரிக்கை
அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.
ஈரோடு
அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.
வரவேற்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு வருகிறார்.
அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பான ஈரோடு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு அருகே மேட்டுக்கடையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி ஈரோட்டில் உள்ள நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மீண்டும் கோவை செல்லும்போது பெருந்துறையில் சிறப்பான வரவேற்பு ஏற்பாட்டை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
திட்ட பணிகள்
அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகள் தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு கருத்து பரப்பப்படுகிறது. இந்த கருத்தை முறியடிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏதாவது ஒரு இடத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை பார்வையிட்டால் சிறப்பாக இருக்கும். அவ்வாறு பார்வையிடப்படும்போது கொங்கு பகுதி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.