கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு வழிப்பறியிலும் தொடர்பு


கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு வழிப்பறியிலும் தொடர்பு
x

கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு வழிப்பறியிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2 பவுன் நகை மீட்கப்பட்டது.

ராணிப்பேட்டை

நெமிலி தாலுகா மஞ்சம்பாடி அருகே கடந்த ஏப்ரல் மாதம் வழிப்பறி நடந்தது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் பகுயில் கஞ்சா விற்றது தொடர்பாக கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 26) மற்றும் சுதாகர் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மஞ்வசப்பாடியில் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இருவரையும் நெமிலி போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறி செய்த நகையை திருமால்பூர் பம்ப் ஹவுஸ் அருகே மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதன்பேரில் விஜயகுமார், சுதாகரை அங்கு அழைத்துச்சென்று 2 பவுன் நகையை போலீசார் மீட்டனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story