சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் முதல்- அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் முதல்- அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, மே.3-
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் முதல்- அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல்- அமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 15 முதல் 35 வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும். அதன்படி 2023-ம் ஆண்டிற்கான முதல்- அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதியன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
இவ்விருதுக்கு 15 வயது முதல் 35 வரை உள்ள ஆண்- பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த நிதியாண்டில் அதாவது 1-4-2022 முதல் 31-3-2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு உள்ளுர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதிற்கான பரிசீலனை கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் முலம் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதியன்று மாலை 4 மணி கடையாகும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை அலுவலக வேலை நாட்களில் 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
==========