பேரணியாக செல்ல முயன்ற தே.மு.தி.க.வினர் தடுத்து நிறுத்தம் களியக்காவிளையில் பரபரப்பு


பேரணியாக செல்ல முயன்ற தே.மு.தி.க.வினர் தடுத்து நிறுத்தம் களியக்காவிளையில் பரபரப்பு
x

பேரணியாக செல்ல முயன்ற தே.மு.தி.க.வினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் களியக்காவிளையில் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

பேரணியாக செல்ல முயன்ற தே.மு.தி.க.வினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் களியக்காவிளையில் பரபரப்பு ஏற்பட்டது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் வக்கீல் ஐடன் சோணி தலைமையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், இனிப்பு வழங்குதல், முதியோர் இல்லங்களில் அன்னதானம் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக களியக்காவிளையில் கொடியேற்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஏராளமானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர பேரணியாக குழித்துறைக்கு ெசல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேரணியாக அணிவகுத்து செல்ல அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். இதனால் தே.மு.தி.க. வினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வாகனங்கள் ஒவ்வொன்றாக தனித்தனியாகச் செல்ல அனுமதித்தனர். இதையடுத்து தே.மு.தி.க.வினர் தனித்தனியாக புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

---


Next Story