இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியில் சேர விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம


இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியில் சேர விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம
x

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியில் சேர விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியில் சேர விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஏர்மேன் பணி

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியில் சேர விருப்பம் உள்ள 17 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களை (ஆண்கள் மட்டும்) கண்டறிய இந்திய விமானப்படை ஆட்தேர்வு மையம் முடிவு செய்து உள்ளது. இந்த பணியில் சேருவதற்கான கல்வித்தகுதி பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி ஆகும். பிளஸ்-2 வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் மற்றும் ஆங்கில பாடத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விமானப்படையில் சேர விருப்பம் தெரிவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அதிக அளவில் இளைஞர்கள் தெரிவிக்கும் இடத்தில் வைத்து விமானப்படைக்கான ஏர்மேன் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால் இளைஞர்களின் விருப்பத்தை கண்டறிய இந்திய விமானப்படையால் ஒரு கூகுள் லிங்க் உருவாக்கப்பட்டு அதில் ஒரு படிவம் அளிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கலாம்

இந்த கூகுள் படிவம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே ஏர்மேன் பணியில் சேர விரும்பும் கல்லூரி மாணவர்கள், கல்லூரிகளுக்கு அனுப்பப்பட உள்ள கூகுள் படிவத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்துக்கு நேரில் வந்தும் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யலாம். அல்லது 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூகுள் லிங்கை பெற்று அதில் இணைக்கப்பட்டு உள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story