எண்ணம் தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கும்


எண்ணம் தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கும்
x

எண்ணம் தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கும்

நாகப்பட்டினம்

எண்ணம் தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் என நான் முதல்வன் வழிகாட்டு நிகழ்ச்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

நான் முதல்வன் வழிகாட்டு நிகழ்ச்சி

நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நான் முதல்வன் என்ற மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

பள்ளி இறுதிப்படிப்பு படித்த நீங்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்பதை அடுத்தவர்களிடம் ஆலோசனை பெறாமல் நீங்களே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து சிந்தனை இருக்கும்.

வாழ்க்கையை தீர்மானிக்கும்

அதற்கேற்ப தங்கள் படிப்பை தேர்வு செய்ய வேண்டும். தாங்கள் தேர்ந்தெடுத்த படிப்புக்கேற்ற வேலை கண்டிப்பாக கிடைக்கும். மாணவர்கள் முழு அர்ப்பணிப்புடன் முடிவெடுத்து படிக்க வேண்டும். என் தந்தையை பார்த்துதான் அரசு பணிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. படித்து முடித்த பிறகு எந்த ஒரு வேலை கிடைக்கிறதோ, அந்த வேலையை மனதார ஏற்று கொண்டு பார்க்க வேண்டும். நம்முடைய எண்ணம் தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் நாகை நகராட்சி தலைவர் மாரிமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story