1,000 மரக்கன்றுகள் நடும் விழா


1,000 மரக்கன்றுகள் நடும் விழா
x

திருவையாறு பேரூராட்சியில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு பேரூராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அய்யனார் கோவில் தெருவில் அமைந்துள்ள அய்யனார் குளத்தின் கரையில் பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம் முன்னிலையில், பேரூராட்சி துணைத் தலைவர் நாகராஜன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.தொடர்ந்து 1000 மரக்கன்றுகள் பேரூராட்சி 15 வார்டுகளில் உள்ள குளங்கள் நீர்நிலைகளில் நட திட்டமிட்டு உள்ளனர் நேற்று மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மரக்கன்றுகளை நடும் பணியை செய்து வருகின்றனர்.


Next Story