"வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல்.." சிதம்பரம் பொது தீட்சிதர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்


வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல்.. சிதம்பரம் பொது தீட்சிதர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
x

வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்களால் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிதம்பரம் தீட்சிதர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடலூர்,

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர் சார்பில், ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலாளர், தமிழக கவர்னர், தமிழக முதல்-அமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கடலூர் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், சிதம்பரம் நடராஜர் கோவில் பொது செயல்பாடுகளை பாரம்பரிய வழக்கப்படி பொது தீட்சிதர்கள் மட்டுமே செய்ய முடியும் என்பதை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி செய்துள்ளதாகவும், அதன்படி கோவிலை நிர்வகித்து பூஜை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோவிலில் பொது தீட்சிதர்கள் தேவாரம் ஓதி வருவதாகவும், ஆனால் சில குழுக்கள் பரப்புரை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தீட்சிதர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் சில குழுக்கள், மத நம்பிக்கைகளில் தலையிட முயற்சிப்பதால் தங்களது வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

மேலும் வழிபாட்டுத் தளங்களில் போலீஸ் பயன்படுத்தப்படுவதால், தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் அருகே நடைபெறும் தேவையற்ற போராட்டங்களால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும், மத நம்பிக்கை செயல்பாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் தீட்சிதர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story