பர்னிச்சர் கடை உரிமையாளரைநிர்வாணப்படம் எடுத்து மிரட்டி நகை, பணம் பறிப்பு


பர்னிச்சர் கடை உரிமையாளரைநிர்வாணப்படம் எடுத்து மிரட்டி நகை, பணம் பறிப்பு
x

பர்னிச்சர் கடை உரிமையாளரை நிர்வாணப்படம் எடுத்துமிரட்டி நகை, பணம் பறிப்பு

திருப்பூர்

திருப்பூர்

மசாஜ் செய்யட்டுமா என்று செல்போனில் பெண் அழைத்ததில் சொக்கிப்போன பர்னிச்சர் கடை உரிமையாளரை நிர்வாண படம் எடுத்து மிரட்டி நகை, பணத்தை பறித்த பெண் உள்பட 3 பேரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பர்னிச்சர் கடை உரிமையாளர்

திருப்பூர் மாவட்டம், அவினாசி மேற்குபதி அவரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 63). இவர் பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2-ந்தேதி பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்த புகாரில், 'கடந்த மாதம் 24-ந்தேதி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண், மசாஜ் செய்ய விருப்பம் இருந்தால் அழையுங்கள் என்றார். நான் சரி என்றதும், அன்று இரவு அந்த பெண் எனது பர்னிச்சர் கடைக்கு அருகே உள்ள அறைக்கு வந்து மசாஜ் செய்து விட்டு ரூ.1,200 வாங்கி சென்றார். பின்னர் மீண்டும் 26-ந் தேதி அதே பெண், என்னை மீண்டும் தொடர்பு கொண்டு மசாஜ் செய்ய வரட்டுமா? என்றார். அன்று இரவு அதேபோல் அறைக்கு வந்து மசாஜ் செய்தபோது, திடீரென்று அறைக்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்தனர். கத்தியை காட்டி மிரட்டி என்னுடைய ஆடைகளை களைய சொன்னார்கள். பின்னர் அந்த பெண்ணையும், என்னையும் சேர்த்து வைத்து நிர்வாணமாக படம் எடுத்துக்கொண்டனர்.

பெண் உள்பட 3 பேர் கைது

பின்னர் என்னிடம் இருந்து 1 பவுன் தங்க மோதிரம், ஏ.டி.எம். கார்டு, ரகசிய எண்ணை பறித்தனர். ரூ.2 லட்சம் கொடு, இல்லாவிட்டால் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவோம் என்று மிரட்டிவிட்டு அந்த பெண் உள்பட 3 பேரும் சென்று விட்டனர். அந்த பெண்ணும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு எனது ஏ.டி.எம். கார்டில் இருந்து அடிக்கடி பணம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்டம் சின்னாண்டவர் கோவில் ரோட்டை சேர்ந்த கோகுல்ராஜ் (21), அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (21), உடுமலை எலையமுத்தூரை சேர்ந்த புஷ்பலதா (30) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story