இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டல்
இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த திருமணமான 25 வயது பெண் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-கடந்த 2018-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கவுண்டச்சிபாளையம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் முகநூல் மூலமாக ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக கூறி என்னிடம் அறிமுகம் ஆனார். அவரை நம்பி நான் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய ரூ.5 லட்சம் வரை கொடுத்தேன். மேலும் நான் வைத்திருந்த காரை வைத்து மாதம் ரூ.20 ஆயிரம் வாடகை தருவதாக கூறி அவர் என்னை ஏமாற்றி வாங்கி சென்றார். ஆனால் அதற்கான வாடகை பணத்தையும், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக கூறி வாங்கிச் சென்ற பணத்தையும் தரவில்லை. ஆபாசமாக வீடியோ காலில் வந்தால்தான் பணத்தை திருப்பி தருவேன் என கூறினார். நானும் அதனை நம்பி ஆபாசமாக வீடியோ கால் அனுப்பியும், அவர் எனக்கு தரவேண்டிய காரையும், பணத்தையும் கொடுக்கவில்லை. என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிடுவேன் என மிரட்டுகிறார். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.