முப்பெரும் விழா
முப்பெரும் விழா
குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, பள்ளியின் சீரமைப்பு பணிகளுக்கான நன்கொடையாளருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொழில் அதிபர்கள் ஜெகபர்சாதிக், முகமது அலி கபூர், முஹம்மது இஸ்மாயில்கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரபாகரன் வரவேற்று பேசினார். இதில் சிங்கப்பூர் தொழில் அதிபர் அப்துல் கபூர் கலந்துகொண்டு பள்ளியின் நுழைவு வாயிலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். முன்னதாக இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன கிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் கழக தலைவர் முருகேசன், துணை தலைவர் குணசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சேரன், பொருளாளர் ஆதித்யா பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவரேகா நன்றி கூறினார்.