பூச்சிக்காட்டில் முப்பெரும் விழா
பூச்சிக்காட்டில் முப்பெரும் விழா நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி அருகே பூச்சிக்காடு முத்தாரம்மன் கோவில் திடலில் முத்தாரம்மன் கோவில் வருசாபிஷேக கொடை விழா, இந்து தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளின் விழா மற்றும் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடந்தது.
தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், பாரதமாதா நண்பர்கள் அன்னதானக்குழு ஆலோசகர் ராஜேந்திரன், கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க செயலர்முத்து, வணிகர் சங்க பாதுகாப்பு பேரவையின் தென்சென்னை மாவட்ட தலைவர்பாலன், பரமன்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் லங்காபதி, துணைத்தலைவர் முத்துலிங்கம் பள்ளி செயலர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் துர்கா, குமரன், பொன் இசக்கி, முத்துவேணி, கவிதா, பா.துர்கா ஆகியோருக்கு பாரதமாதா நண்பர்கள் அன்னதானக்குழு சார்பில் சங்க நிர்வாகிகள் பொன்சிவராகவன், ஆர்.ஏஸ்.பாண்டியன், சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் ரமணன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். திருச்செந்தூர் நகர சபை துணைத் தலைவர் ரமேஷ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமையாசிரியர் ஆபேத்நேகோ நன்றி கூறினார்.