புளியங்குடியில் முப்பெரும் விழா


புளியங்குடியில் முப்பெரும் விழா
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் முப்பெரும் விழா நடந்தது.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி பார்ட் அறக்கட்டளை 6-ம் ஆண்டு தொடக்க விழா, அரசு பணியாளர்களுக்கு பாராட்டு விழா, புதிய வகுப்புகள் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா புளியங்குடி காயிதே மில்லத் திடலில் அறக்கட்டளை தலைவர் முகைதீன் தலைமையில் நடைபெற்றது. மேல பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவர் கவுமி ஜமாலியா, பள்ளிவாசல் தலைவர் காஜா முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் முகம்மது அல்அமீன் வரவேற்றார். அறக்கட்டளை பயிற்சி குழு தலைவர் அப்துல் பாசித் அலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத்தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் அறக்கட்டளையில் பயின்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு கேடயம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் அப்துல் காதிர், மேலப்பள்ளிவாசல் தலைமை இமாம் கலீல் ரஹ்மான், ஆலிம் பாத்திமா பிர்தவுஸ் மவுலவி, அப்துல் ஹமீத் ஆலீம் ஆகியோர் பேசினர். விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், மாவட்ட துணைத்தலைவர் கலீல் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் வஹாப், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான், முஸ்லிம் லீக் நகர தலைவர் அப்துல் ரஹ்மான், நகர செயலாளர் சேக் காதர் மைதீன், நகர பொருளாளர் முகமது அப்துல் காதர், முஸ்லிம் யூத் லீக் மாநில துணை தலைவர் செய்யது பட்டாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறக்கட்டளை பொருளாளர் ஷேக் அப்துல் கரீம் நன்றி கூறினார்.


Next Story