தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா


தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
x

ஜோலார்பேட்டை அருகே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் ஜி.சுதாகர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எம்.மேகநாதன் வரவேற்றார். மாவட்ட தலைவர் எம்.ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் டி.குமார், மாவட்ட பொருளாளர் ஜி.பாபு, கவுரவத்தலைவர் கே.ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அ.ஜான் போஸ்கோ பிரகாஷ் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் சங்க கல்வெட்டினை திறந்து வைத்தார். மேலும் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தியதற்கான ஆணை நகலை துப்புரவு பணியாளர் ஒருவருக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் கே.மகேஸ்வரன், மாநில இணை செயலாளர் ரவிக்குமார், மாநில மகளிர் அணி இணை செயலாளர் எம்.லதா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஒன்றிய பொருளாளர் எச்.பன்னீர் நன்றி கூறினார்.


Next Story