ஆத்தூர் அருகே கொலை வழக்கில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ஆத்தூர் அருகே கொலை வழக்கில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

ஆத்தூர் அருகே உப்பளத்தொழிலாளி கொலை வழக்கில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி

ஆத்தூர் அருகே உப்பள தொழிலாளி கொலை வழக்கில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கொலை வழக்கு

ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சண்முகராஜா (வயது 45). உப்பள தொழிலாளி. இவரை படுகொலை செய்த வழக்கில் ஆத்தூர் தலைவன்வடலி சேதுராஜா தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் மோகனசபரிநாத் என்ற சபரி (21), திருமலை மகன் கார்த்திக் (21) மற்றும் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த பலவேசம் மகன் உதயமூர்த்தி என்ற மூர்த்தி ஆகியோரை ஆத்தூர் போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மோகனசபரிநாத் என்ற சபரி, கார்த்திக் மற்றும் உதயமூர்த்தி என்ற மூர்த்தி ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார். நடப்பு ஆண்டில் இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 27 பேர் உள்பட 115 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story