அனைத்து வங்கி கிளைகள் மூலம் ரூ.17,823 கோடி கடன் வழங்க இலக்கு


அனைத்து வங்கி கிளைகள் மூலம்  ரூ.17,823 கோடி கடன் வழங்க இலக்கு
x

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி கிளைகளின் மூலம் ரூ.17,823 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி கிளைகளின் மூலம் ரூ.17,823 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கடன் திட்ட அறிக்கை

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, நபார்டு வங்கி சார்பில் ஈரோடு மாவட்டத்திற்கான 2023-2024-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர், 'விவசாயத்தில் நீண்டகால கடன் வழங்குவதற்கான சாத்திய கூறுகளை இந்த திட்டம் விளக்கும். இதுபோன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும்' என்றார்.

ரூ.17,823 கோடி இலக்கு

மேலும் உணவு மற்றும் வேளாண் பதப்படுத்துதல் துறைக்கு கடன் வழங்குவதில் கவனம் செலுத்தி, பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை திறம்பட பயன்படுத்த வங்கியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த திட்ட அறிக்கையின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி கிளைகளின் மூலம், 2023-2024-ம் ஆண்டில் ரூ.17 ஆயிரத்து 823 கோடியே 83 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துணைத்தொழில்களுக்கான கடன் ரூபாய் 9 ஆயிரத்து 55 கோடியே 32 லட்சமாகவும், நுண் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூ.5 ஆயிரத்து 800 கோடியே 54 லட்சமாகவும், ஏற்றுமதிக்கு ரூ.356 கோடியே 25 லட்சமாகவும், கல்வி கடனுக்காக ரூ.469 கோடியே 68 லட்சமாகவும், வீடு கட்டுதல் மற்றும் மீள்சக்தி ஆகியவற்றுக்கு முறையே ரூ.1,011 கோடி மற்றும் 75 கோடியே 93 லட்சமும் வழங்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story