கள்ளக்குறிச்சியில்2 அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்புசிறுவன் கைது


கள்ளக்குறிச்சியில்2 அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்புசிறுவன் கைது
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் 2 அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த சிறுவன் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி


சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக சென்னைக்கு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. பஸ்சை தலைவாசல் தாலுகா வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 45) என்பவர் ஓட்டினார். ஆத்தூர் தாலுகா ராமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கண்டக்டராக இருந்தார்.

இந்த பஸ் இரவு 11.45 மணியளவில் கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது கருணாபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கல் வீசி அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தார்.

இதேபோன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா என்.காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் , ஈரோட்டில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடியையும், அதே சிறுவன் கல்வீசி உடைத்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார், வழக்குப்பதிவு செய்து ,சிறுவனை கைது செய்தனர்.


Next Story