கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி சாவு


கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்ட   தொழிலாளி சாவு
x

குலசேகரம் அருகே மதுபோதை தகராறில் தாக்கப்பட்டு கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே மதுபோதை தகராறில் தாக்கப்பட்டு கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தொழிலாளி

குலசேகரம் அருகே உள்ள திருவரம்பு சாத்திரவிளையைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் (வயது 46), தொழிலாளி. திருமணமான சில மாதங்களிலேயே இவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். மது பழக்கம் உடைய இவர் கால்வாய் கரையில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத ராஜேஷ் (32) மற்றும் செல்வம் (32) ஆகியோர் ஜெஸ்டின் குடிசை வீட்டுக்கு வந்து அவருடன் மது குடிப்பது வழக்கமாம்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி ஜெஸ்டினின் குடிசையில் அமர்ந்து மூவரும் மது அருந்தியுள்ளளனர். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டார்

பின்னர் தகராறு முற்றியதில் ராஜேஷ், செல்வம் ஆகியோர் சேர்ந்து ஜெஸ்டினை தாக்கி கால்வாயில் தூக்கி வீசியதாக தெரிகிறது.

கால்வாயில் விழுந்த வேகத்தில் ஜெஸ்டினுக்கு கழுத்து எலும்பு உடைந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் கைதான ராஜேஷ், செல்வம் ஆகிய 2 பேரும் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story