வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
குருபரப்பள்ளி அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள ஜிஞ்சுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகர்நிவாஸ் (வயது25). இவர் மீது அடிதடி, கொலை என பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு அகர்நிவாஸ் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அகர்நிவாசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டார். அதற்கான ஆணையை சேலம் மத்திய சிறையில் அகர்நிவாசிடம் போலீசார் வழங்கினார்.
Related Tags :
Next Story