வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நாங்குநேரி அருகே கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நாங்குநேரி அருகே முன்விரோதம் காரணமாக சாமிதுரை (வயது 26) என்பவரை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த வழக்கில் முருகேசன் (23), விக்டர் (23), ஆனந்த் (21) ஆகியோரை நாங்குநேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் முருகேசன், விக்டர் ஆகியோர் கடந்த 30-ந்தேதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஆனந்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை ஆனந்த் அடைக்கப்பட்டுள்ள நாகர்கோவில் சிறை அதிகாரியிடம் ேபாலீசார் நேற்று வழங்கினர்.


Next Story