வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் கத்தியுடன் சுற்றிய வாலிபர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தியுடன் அந்த பகுதியில் சுற்றி திரிந்தார். இதையடுத்து பழனி அடிவாரம் போலீசார் அவரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் சிறையில் இருந்த சக்திவேலை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.





Next Story