வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

துப்பாக்கியுடன் மிரட்டிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி நாகம்மாள்புரத்தை சேர்ந்த மணி மகன் பால்துரை (வயது 24). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உரிமம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்த போது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்துரையை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பால்துரையின் தொடர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தார்.


Next Story