வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை

திருச்சி பொன்மலையை சேர்ந்தவர் சதாசிவம் மகன் இளவரசன் (வயது 30). இவர் மீது, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவகுமார் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு நண்பர்களுடன் வந்த போது புதுக்குளம் பகுதியில் ஒரு கும்பல் இளவரசனை வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல் குற்றவாளியாக திருச்சி புதூர் துரை என்கிற துரைச்சாமி (39) என்பவர் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் துரைச்சாமியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, மாவட்ட கலெக்டர் கவிதாராமுவுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் துரைச்சாமியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் துரைச்சாமியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.


Next Story