பாலியல் தொழில் செய்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பாலியல் தொழில் செய்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

பாலியல் தொழில் செய்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

திருச்சி வயலூர் ரோடு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக வந்த புகாரின் பேரில் ரவுடி ராஜா என்கிற கார்த்திக் ராஜா (வயது 29) என்பவரை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் இவர் மீது கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக 6 வழக்குகளும், இருசக்கர வாகனம் மற்றும் பூட்டிய வீட்டில் திருடியதாக 5 வழக்குகளும், கொலை முயற்சி மற்றும் அடிதடியில் ஈடுபட்டதாக 2 வழக்குகளும், இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக 2 வழக்குகளும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு விபசார தடுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ராஜா என்கிற கார்த்திக் ராஜாவிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.


Next Story