விவசாயிகளுக்கு உழவன் செயலி பயிற்சி
செம்பராம்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலி பயிற்சி
சங்கராபுரம்
அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உழவன் செயலி பற்றிய பயிற்சி சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல், உதவி தொழில்நுட்ப மேலாளர் மேரிஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா வரவேற்றார்.
இதில் வேளாண்மைதுறை சார்ந்த சொட்டு நீர் பாசனத்தின் பயன்பாடுகள், மானிய விபரங்கள், இயற்கை விவசாயத்தின் பயன்பாடுகள், மண் பரிசோதனையின் அவசியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டம் பற்றியும், உழவன் செயலியின் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதேபோல் தியாகராஜபுரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை பயிற்சி நடைபெற்றது.இதில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரன், துணைத்தலைவர் சித்ராசோலை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.